ADDED : ஜூலை 02, 2025 03:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மக்கள் நலனில் அக்கறை கொண்டு, இரவு பகல் பாராமல் அர்ப்பணிப்பு உணர்வோடும், மனிதநேயத்தோடும், சகோதரத்துவத்தோடும் டாக்டர்கள் சிகிச்சை அளிப்பது போற்றுதலுக்குரியது.
தற்போது, அரசு டாக்டர்கள் தங்களின் ஊதிய உயர்விற்காகவும், அடிப்படை கோரிக்கைகளுக்காகவும் போராட வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இறைவனுக்கு அடுத்ததாக, நம் உயிரை காக்கும் பணியில் அயராது பாடுபடும் டாக்டர்களின் நியாயமான கோரிக்கைகளை, தேசிய மருத்துவ தினத்தில் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
- வாசன்,
த.மா.கா., தலைவர்.