ADDED : மார் 06, 2024 01:17 AM
பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் பிடிபட்டு, ஒரு வாரமான நிலையில், எந்த விதமான விளக்கத்தையும், தி.மு.க., அரசு சார்பாகவோ, கட்சி சார்பாகவோ தெரிவிக்கவில்லை. எப்போதும் நேரடியாக பதில் அளிக்காத முதல்வர், அரைகுறை பேட்டியை, ஆர்.எஸ்.பாரதி வாயிலாக அளிக்க வைத்துள்ளார். அவர் பிரச்னையை திசை திருப்ப முயன்றுள்ளார். போதைப்பொருள் கலாசாரத்தை தடுக்க, தி.மு.க., அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
ஜாபர் சாதிக், போதைப்பொருள் வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் என்பது, முதன்மை குடும்பத்தினருக்கு தெரியுமா, தெரியாதா? இப்படிப்பட்டவருக்கு தி.மு.க.,வில் பொறுப்பு வழங்கியதன் காரணம் என்ன?
போதைப் பொருளால் ஏற்படும் கலாசார சீரழிவு குறித்து, பழனிசாமி எழுப்பிய கேள்விகளுக்கு தகுந்த விளக்கத்தை, பொது வெளியில் முதல்வர் நேரடியாக தெரிவிக்க வேண்டும்.
- ஜெயகுமார்,
முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,

