'ஈரோடு, நாமக்கல் தொகுதிகளை கூட்டணிக்கு ஒதுக்க வேண்டாம்'
'ஈரோடு, நாமக்கல் தொகுதிகளை கூட்டணிக்கு ஒதுக்க வேண்டாம்'
ADDED : ஜன 29, 2024 05:31 AM
சென்னை: 'ஈரோடு, நாமக்கல் தொகுதிகளை, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டாம்' என, தி.மு.க., நிர்வாகிகள், தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவினரிடம் வலியுறுத்தினர்.
தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவினர், சென்னை அறிவாலயத்தில் நேற்று, ஈரோடு, நாமக்கல் தொகுதிகளைச் சேர்ந்த தி.மு.க., நிர்வாகிகளை சந்தித்து, கருத்துக்களை கேட்டறிந்தனர்.
அப்போது, கடந்த லோக்சபா தேர்தலில் ஈரோடு தொகுதி ம.தி.மு.க.,வுக்கும், நாமக்கல் தொகுதி கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டது. இந்த தேர்தலில், அந்த இரு தொகுதிகளிலும், தி.மு.க., போட்டியிட வேண்டும் என, நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.
நிர்வாகிகளுக்குள் நிலவும் கோஷ்டி பூசலை மறந்து, கருத்து வேறுபாடுகளை களைந்து, தேர்தல் பணிகளை சந்திக்க வேண்டும். சட்டசபை தொகுதிகள் வாரியாக ஓட்டுகள் குறையுமானால், மாவட்ட செயலர்கள் மட்டுமல்ல, அமைச்சர்களுக்கும், எம்.எல்.ஏ.,க்கள் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்கும் என, அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.