sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆண்களை காயப்படுத்தாதீர்கள்! கல்யாணமாலை மோகன்

/

ஆண்களை காயப்படுத்தாதீர்கள்! கல்யாணமாலை மோகன்

ஆண்களை காயப்படுத்தாதீர்கள்! கல்யாணமாலை மோகன்

ஆண்களை காயப்படுத்தாதீர்கள்! கல்யாணமாலை மோகன்


ADDED : செப் 16, 2011 09:03 AM

Google News

ADDED : செப் 16, 2011 09:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

1984 மெட்ராஸ் மேற்கு மாம்பலம் மஹாதேவன் தெரு: மாடி வீட்டு பையன் கீழே விழுந்துட்டான்.

வெங்கடேசன் சீக்கிரம் ஓடி வாங்கோ! ... மெட்ராஸ்ல எல்லா இடங்கள்லேயும் தண்ணி கஷ்டம் இருக்கு. வெங்கடேசன் வீடு இருக்கறதால நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை!... கடைசி வீட்டுல லதாவுக்கு பிரசவ வலி வந்துடுத்து. ஆஸ்பிட்டலுக்கு கூட்டிண்டு போகணும். வெங்கடேசன் இருக்காரா?...



2011 சென்னை தி.நகர் ராமசாமி தெரு: 50 வரனுக்கு மேல் பார்த்தாச்சு, ஒண்ணும் சரியா அமையலை இப்போ, உங்க மூலமா மனசுக்கு திருப்தியான வரன் அமைஞ்சிருக்கு. உங்களை என்னைக்கும் மறக்க மாட்டோம். ரொம்ப நன்றி மோகன்சார். வாழ்வில் வண்ணம் தேடி வருபவர்களுக்கு, வானவில் பரிசளிப்பவர் இந்த மோகன். ண்களில் கல்யாண கனவுகள் மின்ன வருபவர்களின் கரங்களில் மாலை கொடுப்பதால்... கல்யாணமாலை மோகன்.

வெள்ளை உடை.... புன்னகை பூத்த முகம்.... அலுவலகத்தில் நுழைந்தவுடன் வரவேற்கும் விநாயகரை வணங்கி நம்மிடம் திரும்புகிறார். வணக்கம் ஆரம்பிக்கலாமா?



திருமண வாழ்க்கை அதிகம் காயப்படுத்துறது ஆண்களையா? பெண்களையா?: பத்து வருஷத்து முன்னாடி வரைக்கும் பாதிப்பு பெண்களுக்கு தான். காரணம் ஆணாதிக்கம் மனசுக்கு புடிச்சவனை விட. மத்தவங்க பார்த்து வைச்ச மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்ட வேண்டிய கட்டாயம் பெண்களுக்கு இருந்துச்சு. ஆனா இப்போ, ஆண்கள் அதிகம் காயப்படுறாங்க. மாத வருமானம் அரை லட்சத்துக்கு குறையக் கூடாது. மாப்பிள்ளைக்கு தாய், தந்தை இருக்க கூடாது. அப்படி இருந்தாலும் திருமணத்துக்கு பின்னாடி அவங்க தனியாத்தான் இருக்கணும்னு அபத்தமான ஆசைகளோட பெண்கள் இருக்கறதால, ஆண்கள் பரிதாபகரமா நிராகரிக்கப்படுறாங்க. ஒரு வேளை, உறவுகளோட கட்டாயத்தின் பேர்ல திருமணம் நடந்தாலும் அளவுக்கு மீறிய ஆசை பெருக்கி கொண்ட தேவைகள் காரணமா, தவறான பல வழிகள்ல கணவன் சம்பாதிக்கிறதுக்கு பெண்கள் காரணமா இருக்குறாங்க. இது மாறணும். வாழ்க்கையும், வசதியும் ஆண்டவன் கொடுக்கறதுங்கற உண்மையை பெண்கள் புரிஞ்சுக்கணும்.



பணமில்லாத ஏழை, பண்பில்லாத பணக்காரன் உங்க இதயத்துல யாருக்கு இடம்?: எப்பவுமே பண்புள்ள மனிதர்களுக்கு தான் என் இதயத்துல இடம். பண்பில்லாம, பணம் மட்டும் வைச்சிருக்கிற மனிதர்களுக்கும் என்கிட்ட இடம் உண்டு. ஆனா, இதயத்துல இல்லை. மூலையில ஏன்னா... இவங்க நினைவுல மட்டுமே இருக்க வேண்டியவங்க. பணம் உள்ள மனிதர்களை நினைவுல வைச்சுகிட்டா, பண்புள்ள மனிதர்களுக்கு பணம் தேவைப்படறப்போ, உதவி செய்றதுக்கு வசதி இருக்கும். இது தப்பில்லையா?ன்னு நீங்க கேட்கலாம். தப்பே இல்லை. இதயமே இல்லாத அரசியல்வாதியை ஆதரிக்கவும் நம்பவும் மனசு தயாரா இருக்கறப்போ பண்பில்லாத பணக்காரன்கிட்டே நட்பு வைச்சுகறதுல என்ன தப்பு?



இப்ப நினைச்சாலும், உங்களை நெகிழ வைக்குற ஒரு நினைவு?: என் கைகள்ல நடந்த ஒரு மரணம். அப்போ எனக்கு வயசு அஞ்சு. ஒன்பது மாசமே ஆன என் தம்பியை கையில வைச்சிருக்கி றேன். சளி, இருமல்ல அவன் அவதிப்பட்டு இருந்தான். அது வரைக்கும் அவன் பக்கத்துல இருந்த அம்மா, தவிட்டு ஒத்தடம் கொடுக்க ஏற்பாடு பண்ணுனும்னு அடுப்படிக்கு போயிருந்தாங்க. அந்த நிமிஷத்துல கபம் ஜாஸ்தியாகி என் கண் எதிர்லேயே மூச்சனைச்சு அமைதியாயிட்டான் என் தம்பி. அன்னைக்கு அவனை மண்ணுக்கு கொடுத்துட்டேன். ஆனா, இந்த நிமிஷம் வரைக்கும் அவனை மனசுல சுமந்துட்டு தான் இருக்கறேன்.



வாழ்க்கை சந்தோஷமா இருக்க வழி சொல்லுங்களேன்?: நல்லவனா இருக்க முயற்சி பண்ணுங்க. பணத்தை அடிப்படையா வைச்சு எல்லா விஷயத்தையும் எடை போடாதீங்க. மனசுக்கும், மனுஷக்கும் முக்கியத்துவம் கொடுங்க. வாழ்க்கை ரசிச்சு வாழறதுக்கு... புரிஞ்சுக்கோங்க. நிம்மதியும், சந்தோஷமும் தானா தேடி வரும்.



வரலாறு: 2000-ல் துவக்கப்பட்ட கல்யாணமாலை மூலம், இதுவரை 1,34,000 திருணமங்கள் நடந்திருக்கின்றன. வாழ்க்கை துணையை அடையாளம் காட்டும் எங்களுக்கு தம்பதிகள் பயணிக்க வளமான பாதையை அமைத்து கொடுக்கும் கடமையும் இருக்கிறது. அதனால் தான் தற்போது குடும்ப அமைப்பை துவக்கியிருக்கிறோம். கல்யாணமாலை மோகனின் வார்த்தைகளில் வைரத்தின் மின்னல்.



-துரைகோபால்








      Dinamalar
      Follow us