ADDED : ஆக 03, 2025 02:37 AM
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கட்டுமானத்துறையின் பங்களிப்பு மட்டும் ஒன்பது சதவீதம்; இருப்பினும் இத்துறை முறைப்படுத்தப் படாததாக உள்ளது.
தரமான பொருட்களை சரியான விலைக்கு வாங்குவதென்பது, சிறு, குறு, நடுத்தர கட்டுமான நிறுவனங்களுக்கான பிரதானப்பிரச்னை.
இதற்கென பல 'ஸ்டார்ட்-அப்' நிறு வனங்கள் உருவாகி யுள்ளன. இதில் குறிப் பிடத்தக்கது, 'ஜிண்டால் ஒன் எம்.எஸ்.எம்.இ., ஆன்லைன் மார்க்கெட் பிளேஸ்' ஆகும். பலருக்கும் பரிச்சயமான ஜிண்டால் ஸ்டீல் நிறுவனம்தான் இதை துவக்கி யிருக்கிறது.
செலவில் சேமிப்பு ஸ்டீல், சிமென்ட் என கட்டுமானப் பணிக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் கட்டுமான நிறுவனங் களுக்கு மொத்தமாகவும், தரமாகவும், சரியான விலையிலும் கொடுப்பது தான் நோக்கம். இது 'பி2பி' ஆன்லைன் கொள்முதல் தளமாகும். நிறுவனங்களின் உள்ளீட்டு செலவில் 5 முதல் 7 சத வீதம் வரை சேமிக்க உதவுகிறது. விலை நிர்ண யம் மற்றும் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதன் மூலம் பொருட்களை சரியான விலையில் கொள்முதல் செய்வது, செல வினங்களை குறைப்பது, இடைத்தரகர்களை குறைப்பது இத் துறையில் முக்கியமானது.
இந்நிறுவனம் மாதாந்திர மொத்த விற்பனை மதிப்பில் 1400 கோடி ரூபாயை ஈட்டுகிறது; ஆண்டுதோறும் 2.4 மில்லியன் மெட்ரிக் டன் எஃகு அல்லது இந்தியாவின் மொத்த எஃகு விநி யோகத்தில் 1.6 சத வீதத்தை கையாள்கிறது.
வாங்குபவர்களுக்கு கடன் தேவை ஏற்பட்டால் அதற்காக ஏற்பாடுகளையும் செய்து தருகிறது. 13 ஸ்டீல் செயலாக்க மையங்களின் கட்டமைப்பை உருவாக்கி, போக்குவரத்து சேவைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. வரும் 2028க்குள் 42,500 கோடி ரூபாய் வணிக மதிப்பை அடையவும் இலக்கை நிர்ணயித்துள்ளது.
இணையதளம்
சந்தேகங்களுக்கு
அலைபேசி: 98204 51259
இணையதளம்: www.startupandbusinessnews.com
- சேதுராமன் சாத்தப்பன் -