ADDED : டிச 24, 2024 07:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : மத்திய உயர்கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு, தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் எழுதியுள்ள கடிதம்.
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய தேர்வு முகமை, ஜன., 3 முதல் 16ம் தேதி வரை, யு.ஜி.சி - நெட் தேர்வை நடத்த உள்ளது. பொங்கல் திருநாள் ஜன., 13 முதல் 16 வரை கொண்டாடப்படுகிறது.
தமிழர்களின், 3,000 ஆண்டு கால கலாசார விழாவை அனைவரும் கொண்டாடும் வகையில், அந்த நான்கு நாட்களும், தமிழக அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனால், இந்த நாட்களில் நடக்க உள்ள மத்திய அரசு தேர்வுகளை ரத்து செய்து, வேறு தேதியில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.