உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : நவ 04, 2026 10:49 AM
ADDED : நவ 04, 2026 10:49 AM
அ நிறம் | அளவு
சென்னை: போக்குவரத்து துறை அமைச்சர் பார்த்திபன் அறிக்கை: பஸ்களை நிறுத்தங்களில் முறையாக நிறுத்தி, பயணியரை பாதுகாப்பாக ஏற்றி செல்லவும், இறக்கி விடவும் வேண்டும். ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களின் செயல்பாடுகள் தொடர்பாக பெறப்படும் புகார்கள், மனுக்கள் குறித்து, கிளை மேலாளர்கள், மண்டல மேலாளர்கள் கவனத்துக்கு எடுத்து சென்று உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடர் விடுமுறை நாட்களில் இயக்கப்படும் சிறப்பு பஸ்களில் பணிபுரியும் ஓட்டுனர், நடத்துனர் அந்தந்த பஸ் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள ஓய்வறைகளில் மட்டுமே தங்க வேண்டும். ‘வெற்றி பயண பஸ்களில் பணிபுரியும் ஓட்டுனர், நடத்துனர்களுக்கு இரட்டிப்பு படி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
