கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து தண்டவாளத்தில் படுத்து டிரைவர் தற்கொலை
கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து தண்டவாளத்தில் படுத்து டிரைவர் தற்கொலை
ADDED : ஜூலை 16, 2025 12:25 PM
சேலம்: போடிநாயக்கனுாரில், 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரயிலில் அடிபட்டு கிடப்பதாக, நேற்று முன்தினம், சேலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு போலீசார், படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து விசாரித்ததில், சூரமங்கலம், ஆண்டிப்பட்டியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அருண்குமார், 28, என தெரிந்தது. நேற்று முன்தினம் இரவு அவர் இறந்துவிட்டார்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
அருண்குமாரின் தாய், 10 ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். தந்தை, நெல்லைக்கு சென்றுவிட்டார். சகோதரருடன் வசித்து வந்த அருண்குமார், திருமணமாகாத விரக்தியில் இருந்துள்ளார். சில மாதங்களுக்கு முன் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். நேற்று முன்தினம் ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து, ரயில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொள்வதாக கூறிவிட்டு, இணைப்பை துண்டித்தார். தொடர்ந்து, போனை அணைத்துவிட்டார். பின் அந்த வழியே வந்த ரயிலில் அடிபட்ட அவரை, மருத்துவமனையில் சேர்த்தும் பலன் கிடைக்கவில்லை. தொடர்ந்து விசாரிக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.