தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/பணியின் போது நெஞ்சுவலி பயணியரை காப்பாற்றிய டிரைவர்

பணியின் போது நெஞ்சுவலி பயணியரை காப்பாற்றிய டிரைவர்

பணியின் போது நெஞ்சுவலி பயணியரை காப்பாற்றிய டிரைவர்


ADDED : நவ 16, 2026 05:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 16, 2026 05:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுக்கோட்டை: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்தவர் கார்த்திகேயன், 37. இவர் திருச்சியில் இருந்து தேவகோட்டை செல்லும் அரசு பஸ்ஸை ஓட்டி செல்லும் போது, நெஞ்சுவலி ஏற்பட்டு சாமர்த்தியமாக பயணியரை காப்பாற்றினார்.

காரைக்குடியில் அரசு போக்குவரத்து பணிமனை கிளையில், அரசு பஸ் டிரைவராக கார்த்திகேயன் மற்றும் கண்டக்டராக செந்தில், 46, ஆகிய இருவரும், இன்று (நவ.,16) திருச்சியில் இருந்து தேவகோட்டை செல்லும் அரசு பஸ்ஸை ஓட்டி செல்லும் போது, 35 பயணியருடன், பஸ் நமணசமுத்திரத்தை கடந்து செல்லும்போது, திடீரென கார்த்திகேயனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

இதை உணர்ந்த அவர், உடனே சாமர்த்தியமாக பஸ்ஸை ஓரமாக நிறுத்திவிட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார்.

பின்னர், கண்டக்டர், பயணியரை வேறு அரசு பஸ்ஸில் ஏற்றி அனுப்பினார். சில மணிநேரம் கழித்து கார்த்திகேயன் தன் இயல்பு நிலைக்கு வந்த பின், அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us