தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/கடும் பனிப்பொழிவு வாகன ஓட்டிகள் அவதி

கடும் பனிப்பொழிவு வாகன ஓட்டிகள் அவதி

கடும் பனிப்பொழிவு வாகன ஓட்டிகள் அவதி


ADDED : நவ 21, 2026 07:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 21, 2026 07:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், இன்று (நவ.,21) காலையில் நிலவிய கடும் பனிப்பொழிவால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

தர்மபுரி மாவட்டத்தில் நடப்பாண்டில் பருவமழை குறைந்ததால், நீர்நிலைகள் வறண்டுள்ளன. மாவட்டத்தில் வாணியாறு, சின்னாறு என, இரு அணைகளில் மட்டும் ஓரளவுக்கு நீர் இருப்பு உள்ளது.

மாவட்டம் முழுவதும் பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இரவில் வெப்ப சலனத்தின் தாக்கம் சற்று குறைந்து காணப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலையில், மாவட்டம் முழுவதும் கடும் பனிப்பொழிவு நிலவியது. சாலைகளில் முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு காணப்பட்டது.

காலை, 8:3-0 மணி வரை, சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை, முழுமையாக மூடிய மூடுபனியால், வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தை குறைந்த வேகத்தில், முகப்பு விளக்கை எரிய விட்டபடியே இயக்கினர். கடும் பனி மற்றும் குளிரால், கிராம பகுதிகளில் மக்கள் அவதியடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us