ADDED : நவ 20, 2025 01:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: அமைச்சர் துரைமுருகன், 87, காது வலி காரணமாக, சென்னை காது, மூக்கு, தொண்டை ஆராய்ச்சி மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக நீர்வளத் துறை அமைச்சரும், தி.மு.க., பொதுச் செயலருமான துரைமுருகனுக்கு, திடீரென காது வலி ஏற்பட்டது. இதன் காரணமாக, சென்னை காது, மூக்கு, தொண்டை ஆராய்ச்சி மையத்தில், நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு, பல்நோக்கு மருத்துவக் குழுவினர், அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அதன் பயனாக, அவரது உடல் நிலை சீரடைந்துள்ளது.
வயது மூப்பு காரணமாக ஏற்படும் பாதிப்பு என, டாக்டர்கள் தெரிவித்தனர்.
தற்போது நலமுடன் இருப்பதால், இன்று வீடு திரும்புவார் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

