sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது கடமை'

/

'டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது கடமை'

'டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது கடமை'

'டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது கடமை'


ADDED : நவ 14, 2024 12:38 AM

Google News

ADDED : நவ 14, 2024 12:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துணை முதல்வர் உதயநிதி: தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். டாக்டர் பாலாஜி நலமுடன் உள்ளார். டாக்டர் குடும்பத்தினரை சந்தித்து, ஆறுதல் கூறினோம். இரவு, பகல் பாராது மக்களை காக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டு வரும் அரசு டாக்டர்களுக்கு, அரசு எப்போதும் பாதுகாப்பு அரணாக இருக்கும்.

மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன்: இந்த மருத்துவமனைக்கு அருகில் தான் கிண்டி காவல் நிலையம் உள்ளது. 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். தினமும் 2,000க்கும் அதிகமான நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். புறநோயாளிகளுக்கான சீட்டு இல்லாமல், டாக்டரை பார்க்க முடியாது. தாக்குதல் நடத்திய நபரின் தாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதால், அந்நபர் பலமுறை வந்திருக்கிறார். அவரை இங்குள்ளவர்களுக்கு தெரிந்திருந்ததால், அவர் மீது எவ்வித சந்தேகம் ஏற்படவில்லை.

* சென்னை போலீஸ் கமிஷனர் அருண்: கத்தி குத்து தொடர்பாக, கொலைமுயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் அரசு மருத்துவமனைகளில் காவல் நிலையங்கள், புறக்காவல் நிலையங்கள் உள்ளன. மருத்துவமனைகளில் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

*மத்திய இணை அமைச்சர் முருகன் தி.மு.க., ஆட்சியில், தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் எந்த அவலத்தில் இருக்கின்றன என்பதற்கு உதாரணம் இது. நிர்வாக திறனின்றி வெற்று விளம்பரத்திலேயே, இந்த அரசு கவனம் செலுத்துகிறது. தமிழகத்தில் டாக்டர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள் என, யாருடைய உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் தான் நிலவுகிறது.

முன்னெடுக்க வேண்டும்.

தமிழகத்தில் தினந்தோறும் நிகழும் பல்வேறு குற்ற நிகழ்வுகள், பொதுமக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளன. சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய ஆட்சியாளர்கள், இனியாவது விழித்துக்கொண்டு மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.- நடிகர் விஜய், த.வெ.க., தலைவர்.



உத்தரவிட்டுள்ளேன்.

அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகளுக்கு நேரம், காலம் பார்க்காமல் உரிய சிகிச்சை அளிப்பதில், நம் அரசு டாக்டர்களின் தன்னலமற்ற பணி அளப்பரியது. இப்பணியின்போது, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், நம் அனைவரின் கடமை. இதுபோன்ற சம்பவங்கள், எதிர்காலத்தில் நிகழாமல் தடுப்பதற்கான, அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்.- முதல்வர் ஸ்டாலின்








      Dinamalar
      Follow us