sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆர்.டி.ஐ., மனுதாரரை நேரில் அழைக்க தடை தகவல் அலுவலர்களுக்கு எட்டு கட்டுப்பாடுகள்

/

ஆர்.டி.ஐ., மனுதாரரை நேரில் அழைக்க தடை தகவல் அலுவலர்களுக்கு எட்டு கட்டுப்பாடுகள்

ஆர்.டி.ஐ., மனுதாரரை நேரில் அழைக்க தடை தகவல் அலுவலர்களுக்கு எட்டு கட்டுப்பாடுகள்

ஆர்.டி.ஐ., மனுதாரரை நேரில் அழைக்க தடை தகவல் அலுவலர்களுக்கு எட்டு கட்டுப்பாடுகள்


ADDED : ஜன 31, 2025 10:51 PM

Google News

ADDED : ஜன 31, 2025 10:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:

'ஆர்.டி.ஐ., எனப்படும், தகவல் அறியும் உரிமை சட்டப்படி மனுக்கள் அனுப்பியவர்களை, பொது தகவல் அலுவலர்கள் நேரில் வரும்படி அழைக்கக்கூடாது' என, மனிதவள மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டப்படி, பொது மக்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை பெற, அரசு துறைகளுக்கு மனு செய்கின்றனர்.

இந்த மனுக்களுக்கு, சம்பந்தப்பட்ட துறையின் பொது தகவல் அலுவலர்கள், 30 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்.

தவறினால், மனுதாரர்கள் மேல்முறையீடு செய்யும் நிலை ஏற்படும். ஆணையத்தில் நடக்கும் மேல்முறையீட்டு விசாரணையில், பொது தகவல் அலுவலர்களுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளது.

இதில், சில துறைகளில் மனுதாரரை, பொது தகவல் அலுவலர்கள் நேரில் அழைத்து, வாய்மொழியாக பதில் அளிப்பதாக கூறப்படுகிறது. இதனால், மனுதாரர்கள் அலைக்கழிக்கப்படுவதாக புகார் கூறப்படுகிறது.

குறிப்பிட்ட சில துறைகளில், பொது தகவல் அலுவலர்கள் பதில் கடிதத்தில் தங்கள் பெயர், பதவி, மொபைல் போன் எண் உள்ளிட்ட தகவல்களை அளிப்பதில்லை. வேறு நபர்கள் கையெழுத்துடன் பதில் கடிதம் வருவதாகவும் கூறப்படுகிறது.

எட்டு கட்டுப்பாடுகள்

இதையடுத்து, அனைத்து துறை அதிகாரிகளுக்கும், மனிதவள மேலாண்மை துறை துணை செயலர் அனுப்பிஉள்ள கடிதம்:

 தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு குறித்த விசாரணையின் போது, பொது தகவல் அலுவலர்கள் தவறாது ஆஜராக வேண்டும். தவிர்க்க இயலாத சமயத்தில் மட்டும், ஆணையத்தின் முன் அனுமதி பெற்று, தனக்கு இணையான பதவியில் இருக்கும் வேறு அதிகாரியை அனுப்பலாம்; தனக்கு கீழ் நிலை அலுவலரை அனுப்பக்கூடாது

 மனுதாரருக்கு தகவல் அளிப்பது பொது தகவல் அலுவலரின் கடமை. மாறாக, உதவி பொது தகவல் அலுவலர் வாயிலாக தகவல்களை அனுப்பக்கூடாது

 மனுதாரருக்கு தகவல்களை அளிக்கும் போது, அதற்கான கடிதத்தில், பொது தகவல் அலுவலர் தன் பெயர், பதவி, அலுவலக முகவரி, அலுவலக தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, மேல்முறையீட்டு அலுவலர் குறித்த விபரம் போன்றவற்றுடன் கையெழுத்திட்டு அனுப்ப வேண்டும்

 மனுதாரர் நகல்களை பெறுவதற்கான கட்டண விபரங்களை, பொது தகவல் அலுவலர் கடிதம் வாயிலாக தெரிவிக்க வேண்டும்

 தமிழக தகவல் ஆணைய விசாரணைக்கு ஆஜராகும், பொது தகவல் அலுவலர் தன் அடையாள அட்டையை கட்டாயம் அணிந்து இருக்க வேண்டும்

 தகவல் அறியும் உரிமை சட்டப்படி பெறப்பட்ட மனுக்கள் மீது, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த கோப்புகளை, மூன்றாண்டுகள் வரையிலும், இரண்டாம் மேல்முறையீடு தொடர்பான கோப்புகளை, ஐந்தாண்டுகள் வரையிலும் பாதுகாக்க வேண்டும்

 தகவல் அறியும் உரிமை சட்டப்படி வரும் மனுக்களுக்கு, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பதில் அளிக்க வேண்டும். மாறாக, மனுதாரரை அலுவலகத்துக்கு நேரில் வருமாறு அழைக்கக்கூடாது

 மனுதாரரின் முதலாவது மேல்முறையீடுகளுக்கு, பொது தகவல் அலுவலர் நிலைக்கு மேல் உள்ள அலுவலர்கள், உரிய காலக்கெடுவுக்குள் விசாரித்து தீர்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us