ADDED : மார் 01, 2024 03:22 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: எல்காட் மேலாண் இயக்குநரான ஐஏஎஸ் அதிகாரி அனீஷ் சேகர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை அரசு ஏற்றுக் கொண்டு உள்ளது.
2021 முதல் 2023 வரை மதுரை மாவட்ட கலெக்டராக இருந்தவர் அனீஸ் சேகர். கடந்த மே மாதம், எல்காட் மேலாண் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டார். இன்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனை அரசு ஏற்றுக் கொண்டது. பதவி விலகலுக்கான காரணம் குறித்த தகவல் வெளியாகவில்லை.

