புதிய தமிழகம் உட்பட 10 அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் 'நோட்டீஸ்'
புதிய தமிழகம் உட்பட 10 அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் 'நோட்டீஸ்'
ADDED : செப் 30, 2025 08:02 AM

சென்னை : புதிய தமிழகம் உட்பட 10 கட்சிகளுக்கு, இந்திய தேர்தல் கமிஷன், 'நோட்டீஸ்' அனுப்பிஉள்ளது.
தேர்தல் கமிஷனில் பதிவு செய்த அரசியல் கட்சிகள், தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை, தேர்தல் கமிஷனிடம் ஆண்டுதோறும் சமர்ப்பிக்க வேண்டும்.
தணிக்கை கணக்கு ஆனால், பதிவு செய்யப்பட்ட, அனைத்து இந்திய எம்.ஜி.ஆர்., மக்கள் முன்னேற்ற கழகம், கிறிஸ்துவ ஜனநாயக முன்னணி, ஜெபமணி ஜனதா, காமராஜர் தேசிய காங்கிரஸ், மக்கள் சக்தி கட்சி ஆகிய கட்சிகள் தணிக்கை கணக்குகளை தாக்கல் செய்யவில்லை.
என் இந்தியா கட்சி, புதிய தமிழகம், இந்திய குடியரசு கட்சி - சிவ்ராஜ், தமிழக முன்னேற்ற காங்கிரஸ், வளமான தமிழக கட்சி என 10 அரசியல் கட்சிகள், கடந்த 2021 முதல் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை, நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் தேர்தல் கமிஷனில் சமர்ப்பிக்கவில்லை.
எனவே, இந்த கட்சிகளை, பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலிருந்து நீக்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.
அதற்கு முன், அந்த கட்சிகளுக்கு கருத்து தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்காக, புதிய தமிழகம் உள்ளிட்ட 10 கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நீக்க வாய்ப்பு இக்கட்சிகள், குறிப்பிட்ட தேதிக்குள் எழுத்துப்பூர்வமான அறிக்கை மற்றும் ஆவணங்களுடன், தமிழக தலைமை தேர்தல் அலுவலர் முன் ஆஜராக வேண்டும்.
எந்த பதிலும் வராவிட்டால், அக்கட்சி களிடம் எந்தவித கருத்தும் இல்லை என கருதி, பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் இருந்து குறிப்பிட்ட அந்தக் கட்சிகளை, தேர்தல் கமிஷன் நீக்கி விட வாய்ப்புள்ளது என தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்தன.