வீடுகளுக்கான மின் கட்டணம் தமிழகத்தில் குறைவு என தகவல்
வீடுகளுக்கான மின் கட்டணம் தமிழகத்தில் குறைவு என தகவல்
ADDED : டிச 17, 2024 05:40 AM
சென்னை: 'வீடுகளுக்கான மின் கட்டணம், இந்திய அளவில் ஒப்பிடும் போது, தமிழகத்தில் குறைவாக உள்ளது' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்த, அரசின் செய்திக்குறிப்பு:
மின் கட்டணங்கள் மற்றும் வரி குறித்த சராசரி தொடர்பாக, 2023 மார்ச் நிலவர புள்ளிவிபரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.
இந்த விபரங்கள் அடிப்படையில், இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் வசூலிக்கப்படும், வீடுகளுக்கான மின் கட்டணங்களை ஒப்பிட்டு பார்த்தால், தமிழகத்தில் தான் வீட்டு மின் கட்டணம், பிற மாநிலங்களை விட குறைவாக உள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், 100 யூனிட் மின்சாரம் இலவசம். வீடுகளில், 100 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்தக்கூடிய மின்சாரத்திற்கு சராசரியாக கணக்கிடும் போது கட்டணம், 113 ரூபாய்.
இந்த சராசரி கட்டணத்தோடு ஒப்பிடும் போது மற்ற மாநிலங்களில், 100 யூனிட்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அதன் விபரம்:
அதன் விபரம்:
முக்கிய மாநிலங்கள் - கட்டணம் ரூபாயில்
மஹாராஷ்டிரா - 668
ராஜஸ்தான் - 833
உ.பி., - 693
பீஹார் - 684
மேற்கு வங்கம் - 654
கர்நாடகா - 631
ம.பி., - 643
ஒடிசா - 426
சத்தீஸ்கர் - 431
***

