ADDED : ஜூலை 13, 2026 07:30 AM

சென்னை: அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும், 450க்கும் அதிகமான இன்ஜினியரிங் கல்லுாரிகளில், நடப்பு கல்வியாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
முதல்கட்டமாக, அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத உள் ஒதுக்கீடுக்கு விண்ணப்பித்த, மாற்றுத்திறன், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடக்கிறது.
இன்று காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லுாரி, பாடப்பிரிவுகளை தேர்வு செய்யலாம்.
அவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீடு ஆணைகள், நாளை காலை 7:00 மணிக்கு வெளியிடப்படும். அதை, மாணவர்கள் மாலை 5:00 மணிக்கு உறுதி செய்ய வேண்டும். பின், வரும் 15ம் தேதி காலை 7:00 மணிக்கு, மாணவர்களுக்கு இறுதி ஒதுக்கீடு ஆணை வெளியிடப்படும்.
அதன்பின், பொதுப்பிரிவில், சிறப்பு பிரிவுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கும்.
