ADDED : அக் 25, 2025 10:03 PM
சென்னை: கண் பராமரிப்பு மருத்துவத்தை மேம்படுத்தும் வகையில், டாக்டர் அகர்வால்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் ஆட்டோமெட்ரி மற்றும் லயோலா ஐகாம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி இணைந்து, பொறியாளர்கள் மற்றும் கண் பராமரிப்பு நிபுணர்கள் பங்கேற்ற இரண்டு நாள் மாநாட்டை நடத்தின. சென்னையில் நேற்று முன்தினம் துவங்கிய மாநாடு, நேற்று நிறைவு பெற்றது.
இதுகுறித்து, அகர்வால்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் ஆட்டோமெட்ரி டீன் கற்பகம் கூறியதாவது:
இந்தியாவில் முதல்முறையாக, கண் டாக்டர்கள் மற்றும் பொறியாளர்கள் இணைந்து, இம்மாநாடு நடத்தப்பட்டு உள்ளது.
இந்த மாநாட்டில், கண் மருத்துவத்தின் எதிர்காலம், நோய்கள் கண்டறிதலுக்கான தொழில்நுட்பம், தரவுகள் உள்ளிட்ட பல விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன.
இதன் வாயிலாக, பார்வை இழப்பை தடுப்பதற்கான மற்றும் சிகிச்சை அளிப்பதற்கான புதுமையான கண்டுபிடிப்புகள் உருவாக வழிவகுக்கும்; இது, மருத்துவ மாணவர்களுக்கு சிறந்த பலனை அளிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

