ADDED : மார் 05, 2024 11:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சர்ச்சுகளில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தின் தலைவராக, முன்னாள் எம்.பி., விஜிலா சத்தியானந்த் நியமிக்கப் பட்டுள்ளார்.
இவர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அ.தி.மு.க., வில் மகளிர் அணி செயலராக இருந்தார்.
திருநெல்வேலி மேயர் மற்றும் ராஜ்யசபா எம்.பி.,யாக பதவி வகித்தார்; 2021ல், அ.தி.மு.க.,வில் இருந்து விலகி, தி.மு.க.,வில் இணைந்தார்.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அவர் சர்ச்சுகளில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

