தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/‘மகாமக விழாவில் ரயில் பயணியருக்கு சிறப்பான சேவை வழங்கப்படும்’

‘மகாமக விழாவில் ரயில் பயணியருக்கு சிறப்பான சேவை வழங்கப்படும்’

‘மகாமக விழாவில் ரயில் பயணியருக்கு சிறப்பான சேவை வழங்கப்படும்’


UPDATED : நவ 06, 2026 07:44 PM

ADDED : நவ 06, 2026 07:35 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:44 PM ADDED : நவ 06, 2026 07:35 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தஞ்சாவூர்: ‘‘மகாமகத்தின் போது கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷனை, 25 லட்சம் பக்தர்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கின்றோம். பயணியருக்கு சிறப்பான சேவை செய்யப்படும்,’’ என, தென்னக ரயில்வே பொது மேலாளர் சுப்பாராவ் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷனில், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்துதல் மற்றும் ஆடுதுறை முதல் சுந்தரபெருமாள்கோவில் வரை, 22 கி.மீ., துாரத்தில், 164 கோடி ரூபாய் மதிப்பீட்டில், இருவழிப்பாதையாக மாற்றுதல் உள்ளிட்ட பணிகளை, நேற்று ஆய்வு செய்த தென்னக ரயில்வே பொதுமேலாளர் சுப்பாராவ் ஆய்வு செய்தார்.

அதன்பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

மகாமகத்தின் போது கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷனை, 25 லட்சம் பக்தர்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கின்றோம். அதற்காக, விசாலமான நடை மேம்பாலம், கூடுதலாக நடை மேடை உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்து வருகின்றோம்.

மகாமக விழாவின் போது, பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் கூடுதலாக இயக்கப்படும். பயணியருக்கு சிரமமின்றி அனைத்து சேவைகள் கிடைக்கவும், தற்காலிக பணியாளர்கள் பணியமர்த்தப்படவுள்ளனர். மகாமக விழாவின் போது பயணியருக்கு சிறப்பான சேவை செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us