ADDED : நவ 22, 2024 02:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:'மதுரையில் டங்ஸ்டன் கனிம சுரங்க குத்தகை தொடர்பாக, எந்த விண்ணப்பமும் வரவில்லை' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசால், மதுரை மாவட்டம் மேலுார் அடுத்த நாயக்கர்பட்டி கிராமத்தில், 'டங்ஸ்டன்' கனிம சுரங்க குத்தகை உரிமம் வழங்கும் ஏல அறிவிப்பு, ஜூலை 24ம் தேதி வெளியிடப்பட்டது.
இதை தொடர்ந்து, 'ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட்' நிறுவனத்தை, தகுதியான நிறுவனமாக நவ. 7ம் தேதி மத்திய சுரங்க அமைச்சகம் தேர்வு செய்துள்ளது. இது தொடர்பாக, அந்நிறுவனத்திடம் இருந்து, தமிழக அரசுக்கு எந்த விண்ணப்பமும் பெறப்படவில்லை. அந்நிறுவனத்திற்கு அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.