ADDED : மார் 02, 2024 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் உள்ள, 39 தொகுதிகளிலும், புதுச்சேரி லோக்சபா தொகுதியிலும், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்புவோரிடம், பிப்., 21 முதல், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான கால அவகாசம், வரும் 6ம் தேதி மாலை 5:00 மணி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
பொதுத்தொகுதிக்கு, 20,000, தனித்தொகுதிக்கு 15,000 ரூபாய் கட்டணம். நேற்று வரை, 1,400க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன.

