உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : நவ 10, 2026 11:08 AM
அ நிறம் | அளவு
துாத்துக்குடி: காவல் நிலையத்தில் வைத்து எஸ்.ஐ., தாக்கியதாக விவசாயி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
துாத்துக்குடி மாவட்டம், கீழ விளாத்திகுளம் கிராமத்தை சேர்ந்த முத்துமுருகன், 50, என்பவரை நேற்று விளாத்திகுளம் எஸ்.ஐ., மாரிசெல்வம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். முத்துமுருகனின் உறவினர் ஒருவரை தேடி வருவதாக கூறிய அவர், திடீரென தாக்கியதாக கூறப்படுகிறது.
உடல் நலம் பாதிக்கப்பட்ட முத்து முருகனை அவரது குடும்பத்தினர் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, தன்னை தாக்கிய எஸ்.ஐ., மாரிசெல்வம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முத்துமுருகன் தெரிவித்துள்ளார்.
