கெங்கராம்பாளையத்தில் டோல்கேட் தமிழக, புதுச்சேரி விவசாயிகள் கண்டனம்
கெங்கராம்பாளையத்தில் டோல்கேட் தமிழக, புதுச்சேரி விவசாயிகள் கண்டனம்
ADDED : டிச 14, 2024 03:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டமங்கலம்,: எதிர்ப்பை மீறி கெங்கராம்பாளையத்தில் டோல்கேட் திறப்புக்கு தமிழக, புதுச்சேரி விவசாயிகள் ஒருங்கிணைப்புகுழு கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கண்டமங்கலத்தில் நடந்தது. கூட்டதிற்கு தலைவர் முருகையன் தலைமை தாங்கினார் பொருளாளர் ஜெயராமன் வரவேற்றார். பொதுச்செயலாளர் ரவி திட்ட அறிக்கையை வாசித்தார்.
கூட்டத்தில் விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில் கெங்கராம்பாளையம் அருகே டோல்கேட் அமைக்கப்பட்டிருப்பதை ஒருங்கிணைப்பு குழு வன்மையாக கண்டிப்பது.
பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தை பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

