வனப்பகுதியில் கொட்டப்பட்ட கழிவுகளுக்கு கட்டணம் வசூல்
வனப்பகுதியில் கொட்டப்பட்ட கழிவுகளுக்கு கட்டணம் வசூல்
UPDATED : அக் 29, 2026 12:29 AM
ADDED : அக் 29, 2026 12:26 AM

புதுக்கோட்டை: புதுக்கோட்டை வனச்சரகம் பிரிவில் உள்ள காப்பு காட்டில், அதிக நச்சுத்தன்மை கொண்ட தொழிற்சாலை கழிவுகள் கொட்டப்பட்டதை அறிந்து, தொழிற்சாலை கழிவுகளை சட்டத்திற்கு புறம்பாக, காப்பு காட்டு பகுதியில் கொட்டிய டிப்பர் லாரியை, வனத்துறையினர் கைப்பற்றினர்.
அந்த டிப்பர் லாரியை கைப்பற்றி, வனச்சரக அலுவலகம் கொண்டு வந்த வாகனத்தின் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்ட போது, அக்கழிவுகள் சிட்கோவில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலை கழிவுகள் என்பது தெரிந்தது.
தமிழக வனச் சட்டம், 1882 சட்டவிதி 21ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, டிப்பர் லாரி உரிமையாளர் மற்றும் தொழிற்சாலை உரிமையாளர் ஆகிய இருவரிடம் தலா, 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
பின்னர், காப்புக்காடு பகுதியில் கொட்டிய தொழிற்சாலை கழிவுகள் அகற்றப்பட்டு, அந்த தொழிற்சாலை வளாகத்திலேயே கொட்டப்பட்டது. இதுபோன்று தொழிற்சாலை கழிவுகள் மற்றும் கட்டுமான கழிவு பொருட்களை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், சாலையோரங்களில் மற்றும் காப்புக்காடு பகுதிகளில் கொட்டும் நபர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
