தமிழகத்தில் 5 மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
தமிழகத்தில் 5 மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
UPDATED : டிச 02, 2024 06:39 AM
ADDED : டிச 01, 2024 06:35 PM

சென்னை: தமிழத்தில் 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.,02) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் கடலோர மற்றும் சில உள் மாவட்டங்களை பெஞ்சல் புயல் புரட்டி போட்டு இருக்கிறது. தொடர்ந்து பெய்த கனமழையால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். நீர் நிலைகள் நிரம்பி, ஊருக்குள் புகுந்ததால் பல மாவட்டங்களில் குடியிருப்புகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது.
இந் நிலையில் இன்றும் (டிச.2) மழையும் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் பல மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. புதுச்சேரியில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது.அதன் விவரம் வருமாறு:
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள்:
விழுப்புரம்
திருவண்ணாமலை
கடலூர்
கிருஷ்ணகிரி
கள்ளக்குறிச்சி ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் மட்டும் விடுமுறை:
வேலூர்,
திருப்பத்தூர்,
தருமபுரி,
ராணிப்பேட்டை,

