தூத்துக்குடியில் தேங்காய் நார் கிடங்கில் திடீர் தீ விபத்து; பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்
தூத்துக்குடியில் தேங்காய் நார் கிடங்கில் திடீர் தீ விபத்து; பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்
ADDED : ஏப் 26, 2025 09:46 AM

தூத்துக்குடி: தூத்துக்குடியில் தேங்காய் நார் கிடங்கில் நிகழ்ந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாயின.
தூத்துக்குடி மில்லர்புரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணசங்கர். இவருக்கு சொந்தமான தேங்காய் நார் கிடங்கு உள்ளது. இங்கிருந்து தேங்காய் நார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந் நிலையில், நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைக் கண்ட பாதுகாவலர், உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் இறங்கினர். 2 மணிநேரம் போராடி தீயைக் கட்டுப்படுத்தினர். தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தேங்காய் நார் எரிந்து சேதம் அடைந்தது.
உரிய நேரத்தில் தீ கட்டுப்படுத்தப்பட்டதால் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. மின்கசிவு விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.