ADDED : நவ 02, 2024 02:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்:விருதுநகர் மாவட்டம், சிவகாசி காரனேசன் காலனியை சேர்ந்தவர் ஹரிராம் சுந்தரவேல், 50; இவருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலை விருதுநகர் அல்லம்பட்டி குல்லுார்சந்தை ரோடு பகுதியில் 'சுந்தரவேல் மேட்ச் இன்டஸ்ட்ரீஸ்' என்ற பெயரில் இயங்கி வருகிறது.
இந்த ஆலை அருகே தீபாவளியை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு, 9:45 மணிக்கு சிறுவர்கள் பட்டாசு வெடித்தனர். பட்டாசு தீப்பொறி, ஆலை ஜன்னல் வழியாக மருந்து இல்லாத தீக்குச்சி உள்ள அறையில் பட்டதில் தீப்பிடித்தது.
விருதுநகர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். எனினும், அறையில் 400 மூட்டை தீக்குச்சி எரிந்து நாசமானது. தீக்குச்சிகளை தரம் பிரிக்கும் லெவலிங் இயந்திரமும் சேதமடைந்துள்ளது. விடுமுறை நாள் என்பதால் ஆலையில் ஆட்கள் இல்லை. போலீசார் விசாரிக்கின்றனர்.

