ADDED : ஜூலை 08, 2025 05:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: திருநெல்வேலி மாவட்டம் உவரியைச் சேர்ந்த 15 மீனவர்கள், ஈரான் நாட்டில் சிக்கித் தவித்தனர். அவர்கள், இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் வாயிலாக மீட்கப்பட்டனர்.
நேற்று முன்தினம் இரவு விமானத்தில் சென்னை வந்தனர்.
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றார். பா.ஜ., ஏற்பாடு செய்த வாகனங்களில், அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.