ADDED : ஜன 29, 2024 12:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலின் துணை கோயிலான கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் நேற்று தைப்பூச திருவிழா கொடியேற்றம் நடந்தது.
தினமும் சேவல், அன்னம், மயில் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி நகர்வலம் வருவார். முக்கிய நிகழ்வாக பிப்., 5ல் இரு வடம் பிடித்து இழுக்கும் திருத்தேரோட்டம் நடக்கிறது.
மலைப்பகுதியிலேயே தேரோட்டம் சிறப்பாக நடப்பது குழந்தைவேலப்பர் கோயிலில் மட்டுமே. இதை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிவர்.