சென்னையில் மலர் கண்காட்சி: அமைச்சர் பன்னீர்செல்வம் அழைப்பு
சென்னையில் மலர் கண்காட்சி: அமைச்சர் பன்னீர்செல்வம் அழைப்பு
ADDED : ஜன 02, 2025 07:21 AM
காட்டுமன்னார்கோவில்; சென்னையில் இன்று துவங்கும் மலர் கண்காட்சியில், 50க்கும் மேற்பட்ட பல வகை மலர்கள் காட்சிப்படுத்தப்படுகிறது என, அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:
தமிழக வேளாண் உழவர் நலத் துறை சார்பில், சென்னை செம்மொழி பூங்காவில் நான்காவது 'சென்னை மலர் கண்காட்சி-2025' இன்று (2ம் தேதி) துவங்கி இரண்டு வாரங்களுக்கு நடக்கிறது. மலர் கண்காட்சியில் 50க்கும் மேற்பட்ட மலர் வகைகள் பயன்படுத்தி 15 லட்சம் மலர் தொட்டிகள் காட்சிப்படுத்தப்படுகிறது. 20க்கும் மேற்பட்ட வடிவங்களில் மலர் காட்சிகள் அமைக்கப்படுகிறது.
கண்காட்சிக்கான நுழைவுச் சீட்டு https://tnhorticulture.in/spetickets/ என்ற இணைய தளம் மூலமாகவும், மலர் கண்காட்சி நடக்கும் செம்மொழி பூங்காவில் நேரடியாகவும் பெற்றுக்கொள்ளலாம்.
மலர் கண்காட்சியில், விவசாயிகள் பயன் பெறும் வகையில் பல்வேறு வேளாண்மைத் திட்டங்கள் இடம்பெறுகிறது. கடலுார் மாவட்ட விவசாயிகள் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.