ADDED : செப் 07, 2025 01:04 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: செங்கோட்டையனை தொடர்ந்து, அதிமுக முன்னாள் எம்பியும்,
செங்கோட்டையன் ஆதரவாளருமான சத்தியபாமாவை கட்சியின் பொறுப்புகளில் இருந்து நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் உத்தரவிட்டுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கட்சித்தலைமைக்கு 10 நாள் கெடு விதித்த நிலையில் கட்சியின் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த திருப்பூர் தொகுதி முன்னாள் எம்பியான சத்தியபாமாவும் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர், மாவட்ட மகளிர் அணி செயலாளர் பொறுப்புகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக, இபிஎஸ் கையெழுத்திட்ட அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.