அ.தி.மு.க.,வில் ஐக்கியமான தி.மு.க., முன்னாள் நிர்வாகி
அ.தி.மு.க.,வில் ஐக்கியமான தி.மு.க., முன்னாள் நிர்வாகி
ADDED : ஜன 29, 2024 05:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க., மீனவர் அணி துணை அமைப்பாளராக இருந்த திருமுருகன் மற்றும் மாவட்ட கலை இலக்கியப் பிரிவு இணை அமைப்பாளராக இருந்த மணிமாறன் ஆகியோர், கடந்த ஆண்டு ஜனவரி மாதம்அமைச்சர் உதயநிதி மகன் இன்பநிதிக்கு பாசறை துவங்கினர்.
அது தொடர்பான போஸ்டர்களை மாவட்டம் முழுதும் ஒட்டியிருந்தனர். இதனால், தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் இருவரையும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார்.
இந்நிலையில், நேற்று மதுரையிலிருந்து திருச்சிக்கு சென்ற அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி முன்னிலையில், தி.மு.க.,வில் இருந்துநீக்கப்பட்டிருந்த திருமுருகன் அ.தி.மு.க.,வில் இணைந்தார்.