ADDED : பிப் 15, 2025 12:11 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் வாசகம் காலமானார்.
அண்ணா பல்கலையில் 1996ம் ஆண்டு முதல் 1999ம் ஆண்டு வரை துணைவேந்தராக பதவி வகித்தவர் வாசகம். தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவன இயக்குனரான இவர், இஸ்ரோவில் விஞ்ஞானியாகவும் பணியாற்றியவர். திருவனந்தபுரம் தும்பா விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குனராகவும் பணியாற்றினார்.
மிக இளம் வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. இந்தியாவின் பாஸ்கரா செயற்கைக்கோள் திட்டத்தின் இயக்குனராகவும் பணியாற்றியவர்.
நீண்ட காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று பெங்களூரு இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 91.

