ADDED : மார் 18, 2025 06:58 AM

சென்னை : மக்கள் நீதி மய்யம் அறிக்கை: பள்ளி மாணவ - மாணவியரின், திறன் மேம்பாட்டை வளர்ப்பதில், கட்சி தலைவர் கமல் மிகுந்த அக்கறை கொண்டுஇருக்கிறார்.
கமல் பண்பாட்டு மையம் சார்பில், பராமரிக்கப்படும் நம்மவர் படிப்பகங்களில், புத்தகங்கள், இலவச 'வைபை' வசதியுடன் கூடிய கணினிகள் உள்ளன.
அமெரிக்காவில் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் வாயிலாக செயல்படும் 'லீப்' என்ற அமைப்பு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு, ஆங்கிலப் பேச்சு பயிற்சி அளித்து வருகிறது.
இந்நிறுவனத்துடன் இணைந்து, நம்மவர் படிப்பகங்களில், கோடை விடுமுறையில், ஆங்கிலப் பேச்சு பயிற்சி முகாம் நடத்த, ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும், மாணவ - மாணவியருக்கு, 'ஆன்லைன்' வாயிலாக, இலவச ஆங்கிலப் பேச்சு பயிற்சி முகாம், ஏப்., முதல் ஜூன் வரை, ஆறு வாரங்களுக்கு நடத்தப்படுகிறது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.