ADDED : நவ 16, 2025 01:40 AM
சென்னை: டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் நீரிழிவு நோயாளிகளுக்கு, வரும் 30ம் தேதி வரை இலவச கண் பரிசோதனை செய்யப்படுகிறது.
மருத்துவமனையின் தலைமை மருத்துவ அலுவலர் அஷ்வின் அகர்வால் , மருத்துவ சேவைகள் பிரிவின் மண்டல தலைவர் சவுந்தரி ஆகியோர் கூறியதாவது:
நீரிழிவு நோயால், கண் படலம் பாதிக்கும் பிரச்னை உள்ளது. இதற்கு மருத்துவ சிகிச்சைகள் உள்ளன. வரும் முன் காப்பது நல்லது.
நீரிழிவு நோயாளிகள் முன்கூட்டியே பரிசோதனைகளை செய்து கொள்வதன் வாயிலாக, பார்வை இழப்பை தடுக்கலாம். நீரிழிவு நோய் திடீரென பார்வை இழப்பை ஏற்படுத்தக் கூடியது.
எனவே, 50 வயதுக்கு மேற்பட்ட, அனைத்து சர்க்கரை நோயாளிகளுக்கும், அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகளில், வரும் 30ம் தேதி வரை இலவச கண் பரிசோதனை செய்து கொள்ளலாம்.
மேலும், மருத்துவ ஆலோசனை கட்டணத்தில், 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இலவச கண் பரிசோதனைக்கு, 95949 24048 என்ற எண்ணை தொடர்பு கொண்டு, முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

