sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சிவில், மாவட்ட நீதிபதி பதவிக்கான முதல்நிலை தேர்வுக்கு இலவச பயிற்சி

/

சிவில், மாவட்ட நீதிபதி பதவிக்கான முதல்நிலை தேர்வுக்கு இலவச பயிற்சி

சிவில், மாவட்ட நீதிபதி பதவிக்கான முதல்நிலை தேர்வுக்கு இலவச பயிற்சி

சிவில், மாவட்ட நீதிபதி பதவிக்கான முதல்நிலை தேர்வுக்கு இலவச பயிற்சி


ADDED : ஆக 16, 2025 09:12 PM

Google News

ADDED : ஆக 16, 2025 09:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'டி.என்.பி.எஸ்.சி., எனும் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் நீதிபதி தேர்வு மற்றும் உயர் நீதிமன்றம் நடத்தும் மாவட்ட நீதிபதி பதவிக்கான முதல்நிலை தேர்வுக்கு, இலவச பயிற்சி வழங்கப்படும்' என, சைதை துரைசாமியின் மனிதநேய ஐ.ஏ.எஸ்., கட்டணமில்லா கல்வியகம் அறிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

மனிதநேய அறக்கட்டளை, கடந்த 20 ஆண்டுகளாக, சமூக மற்றும் பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களுக்கு உதவி வருகிறது. சிவில் நீதிபதி பதவிகளுக்கு நடந்த தேர்வில், 2012ல் 38 பேர்; 2014ல் 57; 2018ல் 46; 2019ல் 40; 2023ல் 81 பேர் என, மொத்தம் 262 பேர் வெற்றி பெற்று, சிவில் நீதிபதிகளாக உள்ளனர்.

இதேபோல மாவட்ட நீதிபதி பதவிகளுக்கான தேர்வில், 2013ல் ஐந்து பேர், 2019ல் ஒருவர் உட்பட, ஒன்பது பேர் வெற்றி பெற்று மாவட்ட நீதிபதிகளாக உள்ளனர். கடந்த, 2019ல் ஏழு பேர், 2021ல் 15 என, 22 பேர், அரசு உதவி குற்றவியல் வழக்கறிஞர்களுக்கான தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், மனிதநேய ஐ.ஏ.எஸ்., கட்டணமில்லா கல்வியகத்துடன் இணைந்து நடத்திய இலவச பயிற்சியில், 298 பேர் வெற்றி பெற்று பணியில் உள்ளனர்.

மாவட்ட நீதிபதி மற்றும் சிவில் நீதிபதி முதல்நிலை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை மனிதநேய கல்வியகம் நடத்த இருக்கிறது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு படிக்க விரும்பும் வழக்கறிஞர்கள், முதலில், www.mntfreeias.com என்ற இணையதளத்தில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.

அத்துடன், 'எண் 28, முதல் பிரதான சாலை, சி.ஐ.டி., நகர், சென்னை- - 600 035' என்ற முகவரியில் அமைந்துள்ள மனிதநேய கட்டணமில்லா ஐ.ஏ.எஸ்., கல்வியகத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவம் கொடுத்தவர்கள் மட்டுமே பயிற்சி வகுப்பில் அனுமதிக்கப்படுவர். தொடர்பு எண்: 044- - 2435 8373, 84284 31107.

சிவில் நீதிபதி பதவிக்கு, மூன்று ஆண்டு வழக்கறிஞராக பயிற்சி பெற்றவர்களும், மாவட்ட நீதிபதி பதவிக்கு, ஏழு ஆண்டு பயிற்சி பெற்றவர்களும் தேர்வு எழுத தகுதி உள்ளவர்கள். பதிவு செய்தவர்களுக்கு, வரும் 21ம் தேதி முதல் தொடர்ந்து, காலை மற்றும் மாலை வேளைகளில் பயிற்சி வகுப்புகள் நடக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us