முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
ADDED : ஜூன் 18, 2025 10:27 PM
கூடலுார்:முல்லைப் பெரியாறு அணையில் பெய்து வரும் மழையால் நீர்வரத்து 5323 கன அடியாக அதிகரித்தது.
இந்த அணையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி நீர்ப்பிடிப்பு பகுதியான பெரியாறில் 22.2 மி.மீ., தேக்கடியில் 20.6 மி.மீ., மழை பதிவானது.
மழை தொடர்ந்ததால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4788 கன அடியிலிருந்து 5323 கன அடியாக அதிகரித்தது. இதனால் நீர்மட்டமும் உயர்ந்து 131.65 அடியை எட்டியது. (மொத்த உயரம் 152 அடி).
நீர் இருப்பு 5083 மில்லியன் கன அடியாகும். தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவும் 1733 கன அடியில் இருந்து 1800 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.  இதனால் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையத்தில் மின் உற்பத்தியும் 162 மெகா  வாட்டாக உயர்ந்தது. நேற்று சற்று மழை குறைந்த போதிலும் மேகமூட்டத்துடன் அவ்வப்போது சாரல் மழை பெய்தது.

