தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/வீடு கட்டுமானத்துக்கு புதிய ஒப்பந்தம் ‘ஜி ஸ்கொயர்’ நிறுவனம் அறிவிப்பு

வீடு கட்டுமானத்துக்கு புதிய ஒப்பந்தம் ‘ஜி ஸ்கொயர்’ நிறுவனம் அறிவிப்பு

வீடு கட்டுமானத்துக்கு புதிய ஒப்பந்தம் ‘ஜி ஸ்கொயர்’ நிறுவனம் அறிவிப்பு


UPDATED : அக் 28, 2026 09:59 PM

ADDED : அக் 28, 2026 09:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2026 09:59 PM ADDED : அக் 28, 2026 09:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: வீடு கட்டுமானத்தில் இணைந்து செயல்பட, ‘ஜே.எஸ்.டபிள்யு. ஒன் ஹோம்ஸ்’ நிறுவனத்துடன், புதிதாக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாக, ‘ஜி ஸ்கொயர்’ நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, ஜி ஸ்கொயர் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:

இந்தியாவின் மாபெரும் வீட்டு மனை மேம்பாட்டு நிறுவனமாக, ‘ஜி ஸ்கொயர்’ உருவாகி உள்ளது. இந்நிறுவனம் தற்போது ஜே.எஸ்.டபிள்யு., குழுமத்தை சேர்ந்த, ‘ஜே.எஸ்.டபிள்யு. ஒன் பிளாட்பார்ம்ஸ்’ நிறுவனத்தின் கிளையான, ‘ஜே.எஸ்.டபிள்யு., ஒன் ஹோம்ஸ்’ உடன், வீடு கட்டுமானத்துக்கான, புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி, ‘ஜி ஸ்கொயர்’ நிறுவனத்தின் வீட்டு கட்டுமான தள பங்குதாரராக, ஜே.எஸ்.டபிள்யு. ஒன் ஹோம்ஸ் நிறுவனம் செயல்படும். இது வீடு கட்டுவதை வசதியானதாகவும், வெளிப்படையானதாகவும், தரமானதாகவும் மாற்றுவதை இலக்காக நிர்ணயித்துள்ளன. வீட்டு மனை வாங்குவதற்கும், வீடு கட்டுவதற்குமான இடைவெளியை நீக்குவதற்குமான முயற்சியாக, இது அமையும். வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைகள், பட்ஜெட் மற்றும் காலக்கெடுவுக்கு ஏற்ற கட்டுமானத் தீர்வுகளை எளிதாக தேர்வு செய்திட, இது உதவும்.

இந்த கூட்டு செயல்பாடு குறித்து, ‘ஜி ஸ்கொயர்’ நிறுவனத்தின் நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான பாலா ராமஜெயம் கூறுகையில், ‘‘ஒரு வீட்டுமனை வாங்கி, அதில் வீடு கட்டும் போது ஏற்படும் சந்தேகங்களை தீர்த்து வழிகாட்டுதல் கிடைக்க, இந்த ஒப்பந்தம் உதவும்,’’ என்றார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us