‘அவுட்சோர்சிங்’ முறையில் பணியாளர்கள் நியமனம் புதிய நடைமுறை அமல்
‘அவுட்சோர்சிங்’ முறையில் பணியாளர்கள் நியமனம் புதிய நடைமுறை அமல்
UPDATED : அக் 28, 2026 09:59 PM
ADDED : அக் 28, 2026 09:56 PM
சென்னை: அரசு அலுவலகங்களில், ‘அவுட்சோர்சிங்’ முறையில், அலுவலர்களை நியமிக்க, புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக அரசு அலுவலகங்களில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிச்சுமைக்கு ஆளாகி வருகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண, ‘அவுட்சோர்சிங்’ முறையில் அலுவலர்களை நியமிக்க, தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
இப்பணியை தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை, அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது.
தங்களுக்கு தேவையான ஒப்பந்த அலுவலர்களை நியமிப்பதற்கு, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் வாயிலாக, அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு முகமைகள் இனி அணுகவேண்டும் என, அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
