ஹங்கேரியில் ஏப்ரல் 27ல் கணேஷ் குமாரின் 'ரைஸ்' சிம்பொனி இசை அரங்கேற்றம்
ஹங்கேரியில் ஏப்ரல் 27ல் கணேஷ் குமாரின் 'ரைஸ்' சிம்பொனி இசை அரங்கேற்றம்
ADDED : ஏப் 20, 2025 09:55 PM

சென்னை: ஹங்கேரியில் ஏப்ரல் 27ல் சென்னையைச் சேர்ந்த இசையமைப்பாளர் கணேஷ் பி.குமாரின் 'ரைஸ்' சிம்பொனி இசையின் அரங்கேற்றம் நடைபெற உள்ளது.
சென்னையைச் சேர்ந்த புகழ்பெற்ற இசைக் கலைஞரும், லண்டனின் டிரினிட்டி இசைக் கல்லூரியில் இரட்டை உரிமம் - இசை செயல்திறன் மற்றும் கோட்பாடு பெற்றவருமாகிய இசையமைப்பாளர் கணேஷ் பி. குமார், எல்.டி.சி.எல். , ஒரு வரலாற்று சாதனையை உருவாக்கத் தயாராக உள்ளார்.
அவரது இசையமைப்பான 'ரைஸ்' சிம்பொனி 'நம்பர் ஒன் இன் டி மைனர்'ன் உலக அளவிலான அரங்கேற்றம் ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் வரும் ஏப்ரல் 27 அன்று நடைபெற உள்ளது.
பெஸ்டி விகாடோவின் புகழ்பெற்ற அரங்கில் நடைபெறும் இந்த இசை நிகழ்ச்சியை பிரசித்திபெற்ற வியன்னீஸ் இசைக் கலைஞர் அந்தோணி ஆர்மோர் வழிநடத்துவார்.
உலகளவில் புகழ்பெற்ற புடாபெஸ்ட் சிம்பொனி இசைக்குழு இசையை நிகழ்த்தும்.
'நம்பர் ஒன் இன் டி மைனர்' இசைமேதை லுட்விக் வான் பீத்தோவனுக்கு சமர்ப்பணமாக 2018ல் இயற்றப்பட்டது. மதிப்புமிக்க இந்த நிகழ்ச்சியில் பாரம்பரிய மற்றும் சமகால மரபுகளின் இணைப்பாக இந்த இசைக்கோப்பு திகழும்.
இந்த நிகழ்ச்சியில் பாரம்பரிய இசை ஜாம்பவான்களான
பீத்தோவன் , ராவெல் பிராம்ஸ்ஆகியோரின் படைப்புகளும், புகழ்பெற்ற சமகால இசையமைப்பாளர்களான மார்க் ஜான் மெக்கன்ரோ (ஆஸ்திரேலியா), பிராங்க் டான்செர்ட் (பிரான்ஸ்) ஆகியோரின் படைப்புகளும் அடங்கும்.
ஜெர்மனியின் ஹாலேயில் 2019 ஜூலை 2வது, 3வது நாட்களில் புகழ்பெற்ற இசைக்குழு நடத்துனர் பெர்ன்ட் ரூப்பின் வழிநடத்துதலில் மதிப்புமிக்க ஸ்டாட்ஸ்காபெலே ஹாலே இசைக்குழுவின் மூலம் இந்த இசைக்கோப்பு பதிவு செய்யப்பட்டது.
இந்த சிம்பொனி இசைகோப்பு 2020ஆம் ஆண்டில் பார்மா ரெக்கார்டிங்ஸின் (அமெரிக்கா) கிளாசிக்கல் முத்திரையான நவோனா ரெக்கார்ட்ஸ் வெளியிட்ட கணேஷ் பி. குமாரின் ஆல்பமான 'ஸ்பிரிட் ஆப் ஹூமானிட்டி' உலக அளவில் வெளியிடப்பட்டது.
இந்த வெளியீடு, இசையமைப்பாளர் லுட்விக் வான் பீத்தோவனின் 250வது பிறந்தநாளை ஒட்டி நிகழ்ந்தது.
இது குறித்து கணேஷ் பி.குமார் கூறுகையில், இந்த சிம்பொனி காலத்தால் அழியாத, இசை மாமேதைகள் படைப்புகளுடன் இடம்பெறுவதை பெருமிதமாக உணர்கிறேன்.
இது எனக்கும் எனது குழுவினருக்கும் நன்றியுணர்வையும் நிறைவையும் அளிக்கும் தருணம்.
இந்த திட்டத்தை வடிவமைத்த எங்கள் தலைமை மொழியியல் ஆலோசகரும் ஆன்மிக வழிகாட்டியுமான மறைந்த வி. முத்துக்குமர குருசாமியை நான் மரியாதையுடன் நினைவுகூர்கிறேன்.
இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்கிய ஸ்காட்லாந்தைச்சேர்ந்த் திட்டத் தலைவர் டாக்டர் பிரேம் வெங்கடேஷ் ராம் மோகன், திறமையான பாடலாசிரியர், மொழிப்பெயர்ப்பாளர், மொழியியல் பயிற்சியாளரான ஜார்ஜினா மார்கரைட் எஸ்ரா, எனது அனைத்து முயற்சிகளுக்கும் பின்னால் உறுதியான ஆதரவையும் அளித்தார்.
மேலும் தனது முதல் இசை ஆசிரியர் அந்தோணி டி குருஸ், அப்துல் சத்தார் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி.
மறைந்த எனது பெற்றோர் கே. பாலகிருஷ்ணன்- டி.சுந்தரி ஆகியோரை நினைவு கூர்கிறேன். அவர்களின் நிபந்தனையற்ற அன்பும் தியாகங்களுமே இந்த பயணத்தை சாத்திய மாக்கின.
இவ்வாறு கணேஷ்குமார் கூறினார்.