ADDED : ஜூலை 14, 2011 09:38 AM

கோவை: கங்கா மருத்துவமனையில், சர்க்கரை நோய் சிகிச்சைக்கு தனிமையம், 'டயபடிக் புட் கேர் கிளினிக்' துவக்க விழா நடந்தது.
சர்க்கரை நோயாளிகளுக்கான மருத்துவ ஆலோசனை, கால்களில் ஏற்படும் புண்களின் தன்மையை மதிப்பிடுதல், புண்கள் ஏற்படா மலிருக்க ஆலோசனை அளிக்கும் வகையில், கங்கா மருத்துவமனையில், தனி சிகிக்கை மையம் துவக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ராஜசபா பதி கூறுகையில்,'சர்க்கரை நோயாளிகளுக்கான மருத்துவ ஆலோசனை வழங்குவதுடன், இம்மை யத்தில் சர்க்கரை நோயாளிகளின் கால் களின் தன்மைக்கேற்ப, கம்ப்யூட்டர் உதவியுடன் தகுந்த காலணிகளும் தயாரித்து வழங்கப்படும்,'' என்றார்.
இம்மையத்தை 'தி இந்து' நாளிதழ் முதன்மை ஆசிரியர் ராம் துவக்கி வைத்தார். 'சிறுதுளி' நிர்வாக அறங்காவலர் வனிதாமோகன் , மருத்துவ மனை தலைவர் சண்முகநாதன், நிர்வாகி ராஜ சேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.