வாடிக்கையாளர்களை ஈர்க்க கூட்டுறவு அங்காடிகளில் பரிசு
வாடிக்கையாளர்களை ஈர்க்க கூட்டுறவு அங்காடிகளில் பரிசு
ADDED : ஏப் 03, 2025 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:கூட்டுறவு அங்காடிகளில் வாடிக்கையாளர்களை கவர, குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவோருக்கு பரிசுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
'ஆன்லைன்' வணிகத்தால் மளிகை கடைகள் மூடப்பட்டு வருகின்றன. தனியார் அங்காடிகள் மற்றும் 'ஆன்லைன்' வணிக போட்டியை சமாளித்து, வாடிக்கையாளர்கள் வருகையை அதிகரிக்க, புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க, பரிசு திட்டத்தை கூட்டுறவு சங்கங்கள் செயல்படுத்த உள்ளன.
அதன்படி, வாரம், மாதம் குறிப்பிட்ட தொகைக்கு மேல் பொருட்கள் வாங்குவோரில், குலுக்கல் முறையில் சிலரை தேர்வு செய்து, பரிசுப் பொருட்கள், மளிகை உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன. இதற்கு உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெறும் பணியில், கூட்டுறவு இணை பதிவாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

