ADDED : மார் 17, 2026 01:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 14,760 ரூபாய்க்கும், சவரன், 1,18,080 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 280 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 50 ரூபாய் குறைந்து, 14,710 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 400 ரூபாய் சரிவடைந்து, 1,17,680 ரூபாய்க்கு விற்பனையானது.
வெள்ளி கிராமுக்கு நான்கு ரூபாய் குறைந்து, 276 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கிலோவுக்கு, 4,000 ரூபாய் சரிவடைந்து, 2.76 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

