ADDED : அக் 27, 2026 06:32 PM
சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து நடக்கும் குற்றச் சம்பவங்களால் வெட்கமாக, அவமானமாக உள்ளது.
பணமாக கொடுப்பது மட்டும், லஞ்சம் என்று இல்லை; ஓட்டுக்காக, அரசுப் பணத்தில் இருந்து வழங்கப்படும் தாலிக்கு தங்கம், சீர்வரிசை பொருட்கள், இலவச சிலிண்டர் போன்ற இலவச திட்டங்களும், அரசு வழங்கும் ஒருவகை 'வார்த்தை லஞ்சம்'தான்.
வேலை இல்லாத பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதே அரசின் கடமையே தவிர, மாத உதவித்தொகை தருவது லஞ்சம் தானே.
த.வெ.க., ஆட்சியில் மக்கள் நலன் சார்ந்த திட்டம் என்று எதுவுமே இல்லை. மின் உற்பத்தியை பெருக்காமல், யூனிட் ரூ.35 க்கு வாங்கும் நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது. த.வெ.க.,விற்கும், தி.மு.க.,விற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆட்சி மாறியும், மக்கள் பிரச்னைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.
– சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர், நா.த.க.,
