அரசு பஸ் டயர் கழன்று ஓடியது: பயணிகள் 56 பேர் தப்பினர்!
அரசு பஸ் டயர் கழன்று ஓடியது: பயணிகள் 56 பேர் தப்பினர்!
ADDED : மே 19, 2025 04:01 PM

திருப்புவனம்: திருப்புவனம் அருகே அரசு பஸ் டயர் கழன்று ஒடிய விபத்தில், பயணிகள் 56 பேரும் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
மதுரை - பரமக்குடி 4 வழிச்சாலையில், ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை சென்ற அரசு பஸ், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே தட்டான்குளம் என்ற இடத்தில்
டயர் வெடித்து 100 மீட்டர் தூரம் கழன்று ஓடியது. பஸ்சில் சென்ற 55 பயணிகளும் உயிர் தப்பினர்.
அரசு பஸ் டயர் கழன்று ஓடும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது.டயரின் தரம், தேய்மானம், பராமரிப்பு பற்றாக்குறை ஆகியவை இதற்க்கு முக்கிய காரணங்களாகும். டயர் கழன்று ஓடும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஆனால் சில நேரங்களில், டிரைவரின் திறமையான செயல்களால் விபத்துக்கள் தவிர்க்கப்படுகின்றன.
வாராந்திர பராமரிப்பு பணி, சோதனை ஓட்டம் நடத்தப்பட வேண்டும். இதனால் டயர் கழன்று ஓடும் சம்பவங்களை தடுக்கலாம். அரசு போக்குவரத்து கழகங்கள், குறிப்பிட்ட கால இடைவெளியில் முறையாக பராமரிப்பு பணிகளை முறையாக மேற்கொள்வதன் மூலம் இத்தகைய விபத்துகளுக்கு தீர்வு காணலாம்.