'சமூக நீதி பற்றி பேச அரசுக்கு தகுதி இல்லை!': ராமதாஸ்
'சமூக நீதி பற்றி பேச அரசுக்கு தகுதி இல்லை!': ராமதாஸ்
ADDED : பிப் 21, 2024 04:41 AM

மஹாராஷ்டிராவில், மராத்தா சமூக மக்களுக்கு, அம்மாநில அரசு, 10 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கியது. ஆனால், இந்த இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. ஆனாலும், இப்போது மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையுடன், மீண்டும் மராத்தா இடஒதுக்கீட்டை, அம்மாநில அரசு கொண்டு வருகிறது. இதற்காக, மஹாராஷ்டிரா சட்டசபையின் சிறப்பு கூட்டத்தொடர் கூட்டப்பட்டு சிறப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது; இது தான் சமூக நீதி. தமிழகத்தில் இல்லாத சமூக நீதி. மஹாராஷ்டிரத்தில் உள்ளது. ஆனால், உச்ச நீதிமன்றமே வழங்க வலியுறுத்தியும், வன்னியர்களுக்கு, 10.50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க, தமிழக அரசு மறுக்கிறது. மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், தன் கடமையை செய்ய தவறி விட்டது.
இப்படிப்பட்டவர்களுக்கு சமூகநீதி குறித்து பேச தகுதி இல்லை.
- ராமதாஸ்,
பா.ம.க., நிறுவனர்.

