sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'நாலு பேரு சேர்ந்தா போதும் அரசு பள்ளிகள் இயங்கும்'

/

'நாலு பேரு சேர்ந்தா போதும் அரசு பள்ளிகள் இயங்கும்'

'நாலு பேரு சேர்ந்தா போதும் அரசு பள்ளிகள் இயங்கும்'

'நாலு பேரு சேர்ந்தா போதும் அரசு பள்ளிகள் இயங்கும்'


ADDED : செப் 02, 2025 02:06 AM

Google News

ADDED : செப் 02, 2025 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''நான்கு மாணவர்கள் இருந்தால் கூட, அரசு பள்ளிகளை இயக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்,'' என, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் மகேஷ் கூறினார்.

சென்னை அண்ணா பல்கலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வி குறித்த வழிகாட்டி நிகழ்ச்சி, 'கல்லுாரி களப் பயணம்' என்ற பெயரில் நடந்தது. அதை, அமைச்சர் மகேஷ் துவக்கி வைத்தார்.

பின், அவர் அளித்த பேட்டி:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, கல்லுாரி பற்றிய பயமும், தயக்கமும் இருக்கும். அவற்றை போக்கும் வகையில்தான், இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அவர்களுக்கு, அருகில் உள்ள கல்லுாரியின் சூழல், சோதனைக்கூடம் உள்ளிட்ட வசதிகள், துறைகள் செயல்படும் விதம் உள்ளிட்டவற்றை நேரடியாக பார்க்கும் வகையிலும், கல்லுாரிகளில் உள்ள படிப்புகள், அவை சார்ந்த வாய்ப்புகள் உள்ளிட்டவற்றை விளக்கும் வகையிலும், இது ஏற்பாடு செய்யப்படுகிறது.

இந்த நிகழ்ச்சி துவங்கியபோது, 47 சதவீதமாக உயர் கல்வி சேர்க்கை இருந்தது. 2022 - 23ம் கல்வியாண்டில் படித்த, 3.97 லட்சம் மாணவர்களில், 2.76 லட்சம் மாணவர்கள் உயர் கல்வியில் சேர்ந்தனர். இது, 70 சதவீதம். அடுத்தாண்டு, 3.36 மாணவர்களில், 2.59 லட்சம் மாணவர்கள் உயர் கல்வியில் சேர்ந்தனர். இது, 77 சதவீதம். தற்போது, உயர் கல்வி சேர்க்கையை 100 சதவீதமாக உயர்த்துவதே எங்கள் இலக்கு.

அரசு பள்ளிகளில் இருந்து, 5 சதவீதம் பேர், தனியார் பள்ளிகளில் சேர்ந்துள்ளதாகவும், தனியார் பள்ளிகளை விட, அரசு பள்ளிகளில் குறைந்தளவு மாணவர்களே சேர்ந்துள்ளதாக சொல்வதும் உண்மையில்லை. மத்திய கல்வி அமைச்சகத்தின் இணையதளத்தில், புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் வந்தபின், அது புரியும். அரசு பள்ளிகள் சேவை மனப்பான்மையுடன் இயங்குபவை. நான்கு மாணவர்கள் இருந்தாலும், அந்த பள்ளிகள் இயங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சரே வெளியிடலாமே! தமிழகத்தில், இந்தாண்டு ஒன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பில் சேர்ந்த மொத்த மாணவர்களில், அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளை விட, தனியார் பள்ளி மாணவர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இதுகுறித்த செய்தி, நம் நாளிதழில் வெளியானது. இதுகுறித்த கேள்விக்கு, அமைச்சர் மகேஷ் மறுப்பு தெரிவித்ததுடன், மத்திய அரசின், 'யுடைஸ்' இணையதளத்தில் இன்னும் புதுப்பிக்கப்பட்ட தகவல் இணைக்கப்படவில்லை என்றும் கூறினார். அதனால், உண்மையான மாணவர் எண்ணிக்கையை, 'யுடைஸ்' இணையதளத்தில் வெளியிடும் வரை காத்திருக்காமல், பள்ளிக் கல்வி துறை அமைச்சரே, உண்மை நிலவரத்தை வெளியிட்டால் நம்பத் தகுந்ததாக இருக்கும். ***








      Dinamalar
      Follow us