ADDED : நவ 27, 2024 02:31 AM
சென்னை:தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் புதிய வடிவமைப்பில் புதிய வசதிகளுடன் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் tn.gov.in என்ற இணையதளம் முகப்புப் பக்கம் மட்டுமின்றி முழுமையாக தேசிய தகவல் மையத்தால் புதுப்பிக்கப்பட்டு உள்ளது.
இதை தமிழக அரசு பராமரிக்கிறது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் துறை வாரியான அரசாணைகள், கொள்கை விளக்கக் குறிப்புகள், புதிய அறிவிப்புகள் மற்றும் சட்ட விதிகள் இடம் பெற்றுள்ளன. தற்போது புதிய அம்சமாக முதல்வர் வெளியிடும் சமூக வலைதளப் பதிவுகள் இதில் உடனுக்குடன் வெளியிடப்படுகின்றன. அரசு செயல்படுத்தும் முன்னோடி திட்டங்கள் அவற்றில் பயன்பெற்ற பயனாளிகள் எண்ணிக்கை போன்ற விபரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
அமைச்சரவை, அரசு துறைகள், மாவட்டங்கள், அரசு திட்டங்கள், அரசு சேவைகள், செய்திக் குறிப்புகள், அரசின் அறிவிப்புகள், வேலைவாய்ப்பு குறித்த விபரங்களும் இடம்பெற்றுள்ளன.