எம்.எல்.ஏ., தொகுதி நிதிக்கான ஜி.எஸ்.டி., அரசே ஏற்கும்: முதல்வர்
எம்.எல்.ஏ., தொகுதி நிதிக்கான ஜி.எஸ்.டி., அரசே ஏற்கும்: முதல்வர்
ADDED : ஏப் 27, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ''எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதிக்கான, 18 சதவீத ஜி.எஸ்.டி., வரியை, தமிழக அரசே ஏற்கும்,'' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
சட்டசபையில், அவர் வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகத்தில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியாக, ஒரு தொகுதிக்கு ஆண்டுக்கு, 3 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. இதற்கு விதிக்கப்படும், 18 சதவீத ஜி.எஸ்.டி., வரியும், இந்த நிதியிலிருந்தே கட்டப்படுகிறது.
இதனால், தொகுதி நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் பணிகள் பாதிக்கப்படுவதாக, எம்.எல்.ஏ.,க்கள் பலர் சுட்டிக்காட்டி உள்ளனர். இதை கருத்தில் கொண்டு, தொகுதி மேம்பாட்டுப் பணிகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய, 18 சதவீத ஜி.எஸ்.டி., வரியை, தமிழக அரசே ஏற்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

